Wednesday, 16 January 2013

மவ்லிதை தடை செய்யக்கோரி கடிதம்

 வடகரையில் குர்ஆன், ஹதீஸுடன் போரிடும் மவ்லிதை ஓதப்படுவதற்கு தடை செய்யக்கோரி மூன்று முஹல்லா ஜமாஅத் தலைவர்களிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்துடன் "திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்" & "முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு" என்ற பிரசுரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.  "இவர்கள் நம்மை சரியாக வழிநடத்துவார்கள்" என்று நம்பும் மக்களின் மறுமை வாழ்வைக் கருத்தில் கொண்டு கடிதத்தை அலட்சியம் செய்யாமல் தலைவர்களும், ஆலிம்களும் இன்ஷா அல்லாஹ் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எடுப்பார்களா...?

நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் (நயவஞ்சகன்) ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான், பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப்பேசுவான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி 34
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
 அல்குர்ஆன் 4:145
கடிதத்தின் மாதிரி வாசகங்கள்

திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்

முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

No comments:

Post a Comment