Monday, 21 January 2013

பொதுக்குழு

கடந்த 18.01.2013 அன்று வடகரை கிளையில் மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான் அவர்களின் தலைமையிலும், மாவட்ட பேச்சாளர் முகம்மது ஃபைசல் அவர்களின் முன்னிலையிலும் பொதுக்குழு நடைபெற்றது. கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாக மாற்றம், தாவா & சமூக பணிகளை வீரியப்படுத்துதல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.முடிவில் சகோ.முகம்மது ஃபைசல் "ஏகத்துவத்தை எத்திவைப்போம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
1.இன்ஷா அல்லாஹ் வரும் மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் நடத்துதல்.
2.மர்கஸிற்கு இடம் வாங்குதல்.
3.வாரந்தோறும் நடைபெறும் பெண்கள் பயான், தெருமுனைப் பிரச்சாரங்களை வீரியப்படுத்துதல்.
4.மாத இதழ்கள், உணர்வு இதழ்களுக்கான சந்தாதாரர்களை அதிகமாக இணைத்தல்

Sunday, 20 January 2013

தெருமுனைப் பிரச்சாரம்

20.1.2013 அன்று தீ.ப தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : " பெருகிவரும் பாலியல் வன்கொடுமை "

Thursday, 17 January 2013

துண்டு பிரசுரம்

17.1.2013 அன்று மவ்லித் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "குர்ஆன் வரிகளுக்கு முரணாகும் மவ்லித் வரிகள்" எனும் தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Wednesday, 16 January 2013

ஆடியோ பயான்

மவ்லித் சீசனையொட்டி சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி அவர்கள் உரையாற்றிய "பாடல்கள் வணக்கமாகுமா? என்ற தலைப்பில் உள்ள ஆடியோ பல்வேறு இடங்களில் மெகாஃபோனில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

மவ்லிதை தடை செய்யக்கோரி கடிதம்

 வடகரையில் குர்ஆன், ஹதீஸுடன் போரிடும் மவ்லிதை ஓதப்படுவதற்கு தடை செய்யக்கோரி மூன்று முஹல்லா ஜமாஅத் தலைவர்களிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்துடன் "திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்" & "முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு" என்ற பிரசுரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.  "இவர்கள் நம்மை சரியாக வழிநடத்துவார்கள்" என்று நம்பும் மக்களின் மறுமை வாழ்வைக் கருத்தில் கொண்டு கடிதத்தை அலட்சியம் செய்யாமல் தலைவர்களும், ஆலிம்களும் இன்ஷா அல்லாஹ் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எடுப்பார்களா...?

நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் (நயவஞ்சகன்) ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான், பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப்பேசுவான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி 34
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
 அல்குர்ஆன் 4:145
கடிதத்தின் மாதிரி வாசகங்கள்

திருக்குர்ஆன் வரிகளோடு மோதும் மவ்லித் வரிகள்

முஹ்யத்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

தெருமுனைப் பிரச்சாரம்


ரஹ்மானியாபுரத்தில் கடந்த 13.01.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு  : "இஸ்லாத்தின் அடிப்படை"